கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் பேலியகொட பிரதேசத்தில் இரண்டு நபர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பாக சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் இவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த சந்தேக நபர் பேலியகொட பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி இடம்பெற்ற இந்த துப்பாக்கி பிரயோகத்தால் இரண்டு நபர்கள் காயமடைந்தனர்.