ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் குறித்த பாரிஸ் உடன்படிக்கையில் இலங்கை கைச்சாத்திடவுள்ளது.
எதிர்வரும் 22ம் திகதி ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் இதற்கான நிகழ்வு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உடன்படிக்கையை இலங்கை சார்பாக அமைச்சர், சுசில் பிரேமஜெயந்த கைச்சாத்திடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான யோசனையை ஜனாதிபதி, அமைச்சரவையில் முன்வைத்திருந்த நிலையில், கடந்த புதன் கிழமை அதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.