எம்பிலிபிட்டியவில் இடம்பெற்ற விருந்துபசாரத்தின் போது காவற்துறையினருடன் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த சுமித் பிரசன்னவின் மரணம் தொடர்பாக ஊமை இளைஞன் ஒருவர் குற்ற புலனாய்வு பிரிவின் முன்னிலையில் பெற்று கொடுத்த வாக்குமூலம் ஊடாக மிக முக்கிய சாட்சி வெளிப்படுத்தப்பட்டுள்ளமை இன்று நீதிமன்றத்தில் தெரியவந்துள்ளது.
மரணமான சுமித் பிரசன்ன கட்டிடமொன்றில் இருந்து கீழே விழுந்த சம்பவத்தை கண்ணால் கண்டதாக கூறப்படும் ஊமை இளைஞன் குற்ற புலனாய்வினரின் முன்னிலையில் பெற்று கொடுத்த வாக்குமூலம் இன்று எம்பிலிபிட்டிய நீதிமன்றத்திற்கு முன்வைக்கப்பட்டது.
இது தொடர்பான வழக்கு விசாரணை எம்பிலிபிட்டிய பதில் நீதவான் பிரசன்ன பெர்ணாண்டோ முன்னிலையில் எடுத்து கொண்ட போது ஆகும்.
குறித்த சம்பவம் தொடர்பாக கண்ணால் கண்டதாக கூறப்படும் ஊமை இளைஞன் ஒருவன் இருப்பதாக நீதிமன்றத்தில் குற்ற புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.
இதனால் இரத்மலானை குருட்டு, செவிடு, ஊமை பள்ளி உதவியுடன் அவரின் சாட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை ஊமை இளைஞன் பெற்று கொடுத்துள்ள சாட்சி ஊடாக மரணம் தொடர்பாக பல முக்கிய சாட்சிகள் முன்வைக்கப்படவுள்ளதாக சுமித் பிரசன்ன சார்பாக முன்னிலையான சட்டத்தரணி விஜித பீ.புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
வழக்கு விசாரணைகளின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த வழக்கு விசாரணை எதிர் வரும் 20 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது.