ஊடகங்கள், ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தும், அச்சுறுத்தும் சகலருக்கும் எதிராக பொலிஸார் சட்டத்தை பொதுவாக அமுல்படுத்த வேண்டும்.
ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்த போவதாக அச்சுறுத்துபவர் யார் என்பது பிரச்சினையல்ல.
அப்படியானவர்களுக்கு எதிராக தகுதி தராதரம் பாராது நாட்டின் சட்டத்தை அமுல்படுத்த வேண்டும்.
திவயின பத்திரிகையின் ஊடகவியலாளருக்கு நடந்த சம்பவம் தொடர்பாக கவலையடைவதாகவும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ள சுதந்திரத்தை சீர்குலைக்க எவரோ இவ்வறானவற்றை செய்கின்றனரா என்பதை தேடி அறிய வேண்டும் எனவும் அமைச்சர் கயந்த கருணாதிலக்க குறிப்பிட்டுள்ளார்.