எதிர்வரும் தமிழக சட்டசபை தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகளின் போது அங்குள்ள அரசியல் கட்சிகள் தமிழீழம் குறித்து அவதானம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் ருத்ரகுமாரன் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
அடுத்த மாதம் 16 ஆம் திகதி தமிழக சட்டசபைக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.
இதனை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் பிரசாரத்தின் போது இலங்கை தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் அரசியல் கட்சிகள் செயற்பட வேண்டும்.
அத்துடன் தமிழக மக்கள் தமது வாக்குகளை பதிவுசெய்யும் போது இலங்கையில் துன்புறும் தமிழ் மக்கள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும் என அவர் கோரியுள்ளார்.
இலங்கை தமிழர் குறித்து இந்தியாவின் மாறுப்பட்ட செயற்பாடு, சர்வதேசத்தை தமிழீழ மக்கள் சார்பாக செயற்பட தூண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.