புகைத்தலை தடை செய்ய அரசு முனைப்பு காட்டிவரும் நிலையில் இலங்கையில் வருடம் தோறும் சுமார் ஐநூறு கோடி ரூபாய் வரை பீடி விற்பனையாவதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வருடம் பீடி விற்பனை 460 கோடி என தெரிவிக்கப்படும் நிலையில் இது வரிக்கு உற்பட்ட விற்பனை தொகை எனவும் வரிக்குற்பாடாமல் சிறு பீடி உற்பத்தியாளர்கள் விற்பனை செய்த தொகையையையும் சேர்த்தால் இது ஐநூறு கோடியை தாண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அரசு புகைத்தலை கட்டுப்படுத்துவதாக சிகரட் வரியை அதிகரித்த நிலையில் கிராம புரங்களில் உள்ள புகைத்தலுக்கு அடிமையானவர்கள் பீடி புகைத்தலுக்கு மாறிவருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஏற்கனவே மது,சிகரட் பாவனை,கஞ்ஞா, ஹெரோயின் என அனைத்து போதை பொருள் பாவனைகளிலும் இலங்கை உலக அளவில் விகிதாசார அடிப்படையில் மிக மிக முன்னிலையில் இருக்கும் நிலையில் இரண்டரை கோடி மக்கள் வாழும் நாட்டில் வருடம் ஒன்றுக்கு சுமார் ஐநூறு கோடி ரூபாய்க்கு பீடி விற்பனையாவது குறிப்பிடத்தக்கது.