சப்ரகமுவ மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை மற்றும் போயா தினங்களில் மேலதிக வகுப்புகளை தடை செய்ய வேண்டும் என இரத்தினபுரி சர்வமத அமைதி அமைப்பு, மாகாண ஆளுநரிடம் கேரியுள்ளது.
2010 ஆம் ஆண்டு இந்த மேலதிக வகுப்புகளை தடை செய்வதற்காக மாகாண சபையில் கொள்கை நிறைவேற்றப்பட்டிருந்தும் அது இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று சர்வமத அமைதி அமைப்பின் அதிகாரிகள் குறித்த மாகாண ஆளுநரிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை எதிர்வரும் மாகாண சபை அமர்வின் போது குறித்த யோசனையை முன்வைத்து மேலதிக வகுப்புகளை தடை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக மாகாண சபை ஆளுநர் தெரிவித்துள்ளார்.