அரச நிறுவனங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்களில் 20 ஆயிரம் கோடி ரூபா ஊழல் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
கோப் குழு இதுவரை மேற்கொண்ட விசாரணைகளுக்கமைய இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.
இதேவேளை, கோப் குழு இன்றைய தினம் மீண்டும் கூடவுள்ளது.
கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் தொடர்பாக முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்காகவே குறித்த குழு கூடுகிறது.
கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் தலைவர், கனிய எண்ணெய் வளத்துறை அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கோப் குழுவில் இன்றைய தினம் முன்னிலையாவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.