பெண்ணொருவரை தொடர்ந்து சில மாதங்களாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி வந்த ஏழு சந்தேகநபர்களை இந்தியாவின் கேரள மாநிலத்தின் காவற்துறையினர் கைது செய்துள்ளனர்
குறித்த பெண்ணை துஷ்பிரயோகம் செய்ததை தொடர்ந்து அதனை ஔிப்பதிவு செய்துள்ளனர். மேலும் குறித்த காணொளியை வௌியிடுவதாக அச்சுறுத்தி தொடர்ந்தும் குறித்த பெண்ணை அந்த ஏழு பேரும் துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய ஏழு சந்தேக நபர்களும் கடந்த திங்கட் கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவத்துடன் மேலும் சிலர் தொடர்பு பட்டிருக்கலாம் என காவற்துறையினர் சந்தேகிக்கின்றனர்.