முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று காலை பாரிய இலஞ்ச ஊழல் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையானார்.
கடந்த அரசாங்கத்தின் போது விமானப்படைக்கு உரித்தான விமானங்களை அனுமதியின்றி உபயோகித்த குற்றச்சாட்டு தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்காக வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக முன்னிலையானார்.
முன்னாள் அமைச்சர் மூன்று வருட காலப்பகுதியில் விமானப்படைக்கு உரித்தான விமானங்களை உபயோகித்ததற்காக பொருளாதார அபிவிருத்தி அமைச்சிலிருந்து விமானப்படைக்கு 15. 5 கோடி ரூபா நிதியை செலுத்தப்பட்டுள்ளதாக இது வரையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.