தம்புள்ளை – பொகவந்தலாவை வீதியின் நோர்வுட் – சென்ஜோன் டிலரி பிரதேசத்தில் பாரவூர்தியொன்று பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் குறித்த வீதியின் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தம்புள்ளையில் இருந்து பொகவந்தலாவை பிரதேசத்திற்கு அரிசி கொண்டு சென்ற பாரவூர்தியொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தற்போது விபத்துக்குள்ளான பாரவூர்தியை பாதையில் இருந்த அகற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.