களனி – பியகம வீதியின் களுபாலத்தின் கீழ் கொள்கலன் பாரவூர்தியொன்று விபத்துக்குள்ளானதால் புகையிரத பாதை இரண்டுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக பிரதான புகையிரத வீதிகளின் புகையிரத போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக உணுபிட்டிய மற்றும் ஹொருகொடவத்தைக்கிடையிலான பிரதான புகையிரத வீதியின் புகையிரத போக்குவரத்தில் தாமதம் ஏற்படும் என புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.