பலாங்கொடை – கிரிமெடிதென்ன பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் அனுமதி பத்திரம் இன்றி கொண்டு செல்லப்பட்டிருந்த மரக்குற்றிகளுடன் இரு சந்தேகநபர்கள் காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பறிமுதல் செய்யப்பட்ட மரக்குற்றிகளில், சந்தன மரக்குற்றிகள் 134 ம் , மருத மரக்குற்றிகள் 19ம் காணப்படுகின்றன.
போக்குவரத்துக்கு பயன்படுத்திய பாரவூர்தியை காவற்துறையினர் கைப்பற்றியுள்ளதுடன் சந்தேகநபர்கள் மற்றும் மரக்குற்றிகள் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.