ஹட்டன் – திம்புலபதன பிரதேசத்தில் இன்று காலை மின்சார தாக்குதலுக்கு உள்ளான இரு பெண்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பெண்கள் இருவரும் திம்புலபதன – பெதலிவத்த வீதியில் பயணித்து கொண்டிருந்த போது மின் கம்பம் ஒன்றின் மீது மரக்கிளை உடைந்து வீழ்ந்துள்ள சந்தர்ப்பத்தில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
காயமடைந்தவர்கள் திம்புலபதன பிரதேசத்தை சேர்ந்தவர்களாவர்.