எதிர்வரும் ஜூலை மாதம் ஆரம்பமாகவுள்ள அவுஸ்திரேலிய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டி தொடர்பான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
மூன்று டெஸ்ட் போட்டிகள், ஐந்து ஒரு நாள் போட்டிகள் மற்றும் இரண்டு இருபதுக்கு இருபது போட்டிகளைக் கொண்ட தொடரில் இரு அணிகளும் பங்குகொள்ளவுள்ளன.
இதன்படி, இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஜூலை மாதம் 26ஆம் திகதி கண்டியில் ஆரம்பமாகவுள்ளது.
ஐந்து போட்டிகளைக் கொண்ட ஒருநாள் போட்டித் தொடர் ஆகஸ்ட் மாதம் 21ஆம் திகதி கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது.
அத்துடன், இருபதுக்கு இருபது போட்டியின் முதல் ஆட்டம் செப்டம்பர் மாதம் 6ஆம் திகதி பல்லேகலையில் இடம்பெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.