‘பொறி’, ‘அமர்க்களம்’, ‘அவன் இவன்’, ‘இந்தியா- பாகிஸ்தான்’ உட்பட பல்வேறு படங்களில் நகைச்சுவை காட்சிகளில் நடித்தவர் குள்ள பிரபு வடிவேலுவுடன் பல படங்களில் நடித்துள்ளார்.
சென்னை நம்மாழ்வார்பேட்டையில் வசித்து வந்த இவர், கடந்த சில மாதங்களாக தைராய்டு பிரச்னைக்காக சிகிச்சைப் பெற்று வந்தார். நேற்று காலை அவர் வீட்டில் திடீரென மரணமடைந்தார். அவருக்கு வயது 52 ஆகும்.
மறைந்த குள்ள பிரபுவுக்கு மனைவி பிரபா (38) மற்றும் 9-ம் வகுப்பு படிக்கும் அஜித்குமார் (15), 5-ம் வகுப்பு படிக்கும் தமிழ்செல்வன் (10) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
எனது கணவர் 22 வருடங்களாக, நடிகர் சங்கத்தில் உறுப்பினராக உள்ளார். தற்போது அவருக்கு பட வாய்ப்பு குறைந்ததால் மகன்களை படிக்க வைக்க முடியாமல், வறுமையில் வாடிக் கொண்டிருக்கிறோம்.
கணவரை இழந்து வாடும் எங்களுக்கு நடிகர் சங்கம் உதவ வேண்டும்’ என்று பிரபுவின் மனைவி பிரபா, கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.