வீதியில் செல்லும் பெண்களை கிண்டல் செய்து வந்த இளைஞர் ஒருவர் பிரதேசவாசிகளின் தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் ஒன்று பாணந்துறை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது .
தாக்குதலில் காயமடைந்த குறித்த இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளான இளைஞர் 27 வயதுடைய ஆயுர்வேத மருத்துவ மாணவர் என தெரியவந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
இவர் நீண்ட காலமாக இவ்வாறு வீதிகளில் செல்லும் பெண்களை கிண்டல் செய்து வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கோபமடைந்த பிரதேசவாசிகள் நேற்று இரவு குறித்த மாணவரை தாக்கியுள்ளனர்.