குருநாகல் பொல்பிதிகமை சியம்பலாவெவ பிரதேசத்தில் மாமனார் தனது மருமகனின் தலைக்கு கத்தியால் தாக்கி கொலை செய்துள்ளார்.
இருவருக்குமிடையில் இடம்பெற்ற இடப்பிரச்சினை காரணமாகவே குறித்த இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரவித்தது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரான மாமனார் கைது செய்யப்பட்டுள்ளார்.
சியம்பலாவெவ பிரதேசத்தினை சேர்ந்த 35 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.