நாட்டில் நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக முட்டையின் விலை உள்நாட்டு சந்தையில் பல வருடங்களின் பின்னர் உயர்வடைந்துள்ளதாக கோழி பண்ணை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நாடுபூராகவும் முட்டை உற்பத்தி முப்பது சதவீதத்தினால் சரிந்துள்ளதாக பதிவாகியுள்ளது.
முட்டையின் விலை அதிகரித்துள்ளமையின் காரணமாக முட்டையினால் தாயாரிக்கப்படுகின்ற உணவு வகைகளின் விலைகள் உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.