மீள்குடியேற்ற அமைச்சினால் ஒதுக்கப்பட்டுள்ள சிறப்பு நிதியின் மூலம் யாழ்ப்பாண மாவட்டத்தில் பல்வேறுப்பட்ட செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதனடிப்படையில் சுமார் எட்டு இலட்சம் பெறுமதியான மூவாயிரம் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.
அத்துடன் மூவாயிரம் பயனாளிகளுக்கு தலா ஒரு இலட்சம் பெறுமதியான வாழ்வாதார உதவிகளும் ஆயிரத்து இருநூறு பயனாளிகளுக்கு தலா 55 ஆயிரம் ரூபா செலவில் மலசலகூடங்களும் அமைத்துக்கொடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதுதவிர, 100 மில்லியன் செலவில் குடிநீர் கிணறுகள் அமைக்கப்படவுள்ளதாகவும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.