கிராமத்தை அமைக்கும் நோக்கில் அமைச்சர் ரிசாத் பதியூதீன் மீண்டும் வில்பத்து வனப்பகுதியில் வேலைகளை ஆரம்பித்துள்ளதாக சிங்கள ராவய அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல்கந்தே சுதத்த தேரர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
பொதுபல சேனா அமைப்பு நேற்று கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அவர் இதனை தெரிவித்தார்.
வட மாகாணத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட போகஸ்வௌ கிராமத்தின் பகுதிகள் பிரதேச செயலாளர் பலவற்றுக்கு பிரித்து வழங்கப்பட்டுள்ளது.
இதேபோன்ற நிலைமை முல்லைத்தீவு மாவட்டத்திலும் நிலவுதாக மாகல்கந்தே சுதத்த தேரர் குறிப்பிட்டார்.