வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வாகனேரி பிரிவிவைச்சேர்ந்த இரு இளம் பெண்கள் சிறிய ரக சொகுசு வாகனம் ஒன்றில் கொண்டு செல்லப்பட்டு துஸ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவருகின்றது.
கலாசாரத்தினை சீரழிக்கும் வகையில் மக்களின் வறுமையை காரணமாக பயன்படுத்தி இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகவும் அறியமுடிகின்றது.
இது தொடர்பில் பொலிஸார் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அப்பிரதேசத்து மக்கள் தெரிவிக்கின்றனர்.