செல்லக்கதிர்காமம் – புத்தல வீதியின் வளைவு பிரதேச ஓடையிலிருந்து இன்று இரண்டு மனித உடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட இரண்டு ஆண்களின் உடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.
திஸ்ஸமஹராம பிரதேசத்தைச் சேர்ந்த இவர்கள் கொலை செய்யப்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படவில்லை என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இதேவேளை, வெள்ளம்பிடிய கொஹிலவத்த பிரதேசத்தில் களணி கங்கையில் மிதந்த மனித உடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
காவற்துறையின் அவசரப்பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்டையிலேயே இந்த உடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.