ரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையில் நேற்று நாடாளுமன்ற கட்டிடத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
ஒன்றிணைந்த எதிர்கட்சியின் பிரதிநிதி, நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா எமது செய்திச் சேவைக்கு இதனைத் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்த ராணுவ வீரர்கள் சிலர் அகற்றப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டமை தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்த ராணுவ வீரர்கள் அகற்றப்பட்டு அதற்கு பதிலாக காவல்துறை அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளமையை முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவும் உறுதிப்படுத்தியுள்ளது.
எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பாக எமது செய்திச் சேவை பதில் ராணுவ பேச்சாளர் கர்ணல் மனோஜ் லமாஹேவாவிடம் வினவியது. ராணுவ வீரர்கள் அகற்றப்பட்டமை தொடர்பாக ராணுவ தலைமைக்கு இதுவரை அறிவிக்கப்படவில்லை என குறிப்பிட்டார்.