ஐ.நா. செயலாளர் நாயகமான பான் கீ மூனின் பதவிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில், புதிய செயலாளர் நாயகம் யார் என்பதை உறுதி செய்யும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருகின்றது.
அந்தவகையில், நியூஸிலாந்திடம் இருந்து, அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்திற்கு பொறுப்பாளராக செயற்பட்ட ஹெலன் கிளார்க்கினை, அடுத்த செயலாளர் நாயகமாக அறிவிப்பது தொடர்பில், 193 நாடுகளின் தலைவர்களை உள்ளடக்கிய பொதுச்சபையின் தலைவருக்கு நேற்று கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நியூஸிலாந்தின் முன்னாள் பிரதமரும், தற்போதைய ஐ.நா.வின் மூன்றாவது முக்கிய பொறுப்பான, அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்ட பொறுப்பாளராகவும் கடமையாற்றும் ஹெலன் கிளார்க் அடுத்த ஐ.நா.வின் உயரிய பதவியான, செயலாளர் நாயகம் பதவிக்கு தெரிவு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அந்தவகையில், 1999 ஆண்டு தொடக்கம் 2008 ஆண்டு வரை ஹெலன் நியூஸிலாந்தின் பிரதமராகவும் செயற்பட்டு வருகின்றார். புதிய செயலாளர் நாயகம் யார் என்பதை உறுதி செய்யும் நடவடிக்கைகள் எதிர்வரும் கிழமை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.