வவுனியாவில் மின்னல் தாக்கி பாடசாலை மாணவன் பலியாகியுள்ளார்.
இன்று மாலை வவுனியாவில் இடியுடன் கூடிய பலத்த மழையின் போதே இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.
சம்பவத்தில் மின்னல் தாக்கி உயிரிழந்தவர் காத்தார்சின்னக்குளத்தை சேர்ந்த சுலக்ஷன் (17வயது) என்ற பூந்தோட்டம் பாடசாலையில் சாதாரண தரம் கற்கும் மாணவனாவர்.
பலியானவரின் சடலம் வவுனியா பொது வைத்திசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதiனினை மேலதிக விசாரணைகள் திடீர் மரண விசாரணை அதிகாரி கிஷோர் அவர்களால் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன்,இச்சம்பவம்தொடர்பான மேலதிகவிசாரணையினை வவனியா பொலிசாரால் மேற்றகொள்ளப்படுகின்றது.