கணவரால் காலையில் பால் கேட்கப்பட்டுள்ள நிலையில் அதனை வழங்க அவரது மனைவி மறுத்ததால் கோபமடைந்த கணவர் அவரது கழுத்தை பிடித்து நெரித்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தின் பின்னர் அப்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
கேகாலை பிரதேசத்தை சேர்ந்த குறித்த பெண் 48 வயதுடைய இரு குழந்தைகளின் தாயாராவார்.
அவரது கணவர் தினமும் மது அருந்திவிட்டு வந்து அவரை அச்சுறுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த நபர் மேசன் தொழிலில் ஈடுபட்டு வருபவர் என எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.