விஜய் நடித்த தெறி படத்துக்கு தணிக்கைக் குழுவில் எந்த வெட்டும் இல்லாத க்ளீன் யு சான்றிதழ் கொடுத்துள்ளனர். இதைத் தொடர்ந்து படத்தை ஏப்ரல் 14-ம் தேதி வெளியிடுவதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு.
தெறி படம் குடும்பத்துடன் பார்க்கக் கூடிய பொழுதுபோக்குப் படம் என்று தணிக்கைக் குழுவினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். யு சான்று கிடைத்தது குறித்து மிகவும் மகிழ்ச்சி தெரிவித்த தாணு, “தெறி படத்தை ஏப்ரல் 14, தமிழ்ப் புத்தாண்டையொட்டி உலகம் முழுவதும் வெளியிடுகிறோம். விஜய் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, சினிமா ரசிகர்களுக்கு இந்தப் படம் தமிழ்ப் புத்தாண்டுப் பரிசாக அமையும்,” என்றார்.
அட்லீ இயக்கியுள்ள தெறி படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா மற்றும் எமி ஜாக்ஸன் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்