மட்டக்களப்பு, செங்கலடியில் இன்று திங்கட்கிழமை (04) காலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மூதாட்டியெருவர் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.
செங்கலடி, பதுளை வீதியைச் சேர்ந்த 70 வயதுடைய சந்தனம் தங்கராசா என்ற மூதாட்டியே உயிரிழந்துள்ளார்.
தனது வீட்டிலிருந்து கடைக்கு பொருட்களை கொள்வனவு செய்வதற்காக சென்ற மூதாட்டியை செங்கலடியிலிருந்து பதுளை வீதியூடாக பயணித்த மோட்டார் சைக்கிளொன்று மோதித் தப்பிச் சென்றுள்ளதாக அயலவர்கள் தெரித்தனர்.
சம்பவ இடத்திலேயே உயிரிந்த மூதாட்டியின் சடலம், பிரேதப் பரிசோதனைகளுக்காக செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரை, பிடிப்பதற்கு ஏறாவூர்ப் பற்று பிரதேச சபையின் சீ.சீ.ரி.வி கெமராவின் உதவியை நாடியுள்ள ஏறாவூர்ப் பொலிஸார், சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.