ரோட்டக்: இந்தியாவில் சட்டம் என்று ஒன்று மட்டும் இல்லை என்றால் ”பாரத் மாதா கி ஜே’ என சொல்ல மறுப்பவர்களின் தலையை வெட்டுவோம் என்று யோகாகுரு ராம்தேவ் பேச்சால் சர்ச்சை எழுந்துள்ளது. பாரத் மாதா கி ஜெய் முழக்கத்தை இந்தியர்கள் அனைவரும் எழுப்ப வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் வலியுறுத்தி இருந்தார். இதற்கு இந்துத்துவா அமைப்புகள் ஆதரவு தெரிவிக்க இஸ்லாமிய அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.