சமய சடங்கொன்று நடைபெற்றுக் கொண்டிருந்த போது, பெண் ஒருவர் மூச்சு திணறி மரணித்த சம்பவம் ஒன்று அநுராதபுர பிரதேசத்தில் கடந்த 13ம் திகதி இடம்பெற்றிருந்து.
முழு எலுமிச்சை பழம் ஒன்றை பெண்ணின் வாயில், மாந்திரீகர் திணிக்க முனைந்த போது குறித்த பெண்ணிற்கு மூச்சுத் திணரல் ஏற்பட்டதால் இந்த மரணம் நிகழ்ந்துள்ளதாக பிரேத பரிசோதனையின் போது தெரியவந்துள்ளது.
கடந்த மாதம் 13ஆம் திகதி அனுராதபுரம், எலயாயபத்துவ பிரதேசத்தில் உள்ள மாந்திரீகரிடம் அழைத்து சென்றதாக உயிரிழந்த பெண்ணின் கணவர் தெரிவித்துள்ளார்.
மாந்திரீகர் தமது மனைவியின் வாயில் பலவந்தமாக எலுமிச்சை பழத்தை திணித்ததாகவும் அவர் காவல்துறையினரிடம் வாக்கு மூலம் ஒன்றை அளித்துள்ளார்.