தமிழ் ,சிங்கள புத்தாண்டிற்கு சொந்த ஊர்களுக்கு செல்லவுள்ள பொதுமக்களின் பயண வசதிக்காக மே மாதம் 8ம் திகதி முதல் 13ம் திகதி வரை விசேட போக்குவரத்து சேவையை நடைமுறைப்படுத்தவுள்ளதாக மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அதன் தலைவர் துசித நுவன் வனிகரத்ன கொழும்பில் இன்று இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு இதனை தெரிவித்திருந்தார்.
இதற்காக 500 பேரூந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
விசேடமாக தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்கள் தனது ஊர்களுக்கு செல்வதற்காக பேரூந்து தேவையென கோரிக்கை விடுத்தால் அதற்காக விசேட செயற்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக அவர் இதன் போது தெரிவித்திருந்தார்.