தேசிய கல்வியற் கல்லூரிகளுக்காக இம்முறை நான்காயிரத்து 700 மாணவர்களை இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதேபோல் , எதிர்வரும் இருவருடங்களில் ஒரு வருடத்திற்கு ஆறாயிரத்து 200 மாணவர்கள் வீதம் கல்வியற் கல்லூரிக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையொன்றை வௌியிட்டு குறித்த அமைச்சு தெரிவித்துள்ளது.
அதே போல் விரிவுரையாளர் பதவிக்காக ஆயிரத்து 190 வெற்றிடங்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில் , அதற்கு தேவையான ஆட்சேர்ப்பு எதிர்வரும் தினங்களில் மேற்கொள்ளப்படவுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.