ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் பிரிவு ஊடாக தனது மகளை அரசியலுக்குள் கொண்டுவருவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முயற்சித்து வருகிறார் என அறியமுடிகிறது.
மேதின கூட்டத்தையும் பேரணியையும் பெருமெடுப்பில் நடத்துவதற்கு அக்கட்சி தயாராகிவருகிறது. இதல் இளைஞர் பிரிவையும் அக்கட்சி பலப்படுத்தவுள்ளது. அன்றைய தினமே மைத்திரியின் மகளின் அரசியல் பிரவேசம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குடும்ப அரசியலுக்கு ஒருபோதும் இடமில்லையென கூறிவரும் மைத்திரி, தான் அரசியலில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் தனது வாரிசு ஒருவராவது அரசியலில் இருக்க வேண்டும் என்ற நோக்கில்தான் இப்படி செய்கிறார் என அறியமுடிகிறது. அதுவும் நேரடியாக நாடாளுமன்றத் தேர்தலில் களமிறக்காது உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இறக்கி, படிப்படியாக மகளை முன்னேற்றுவதே அவரது நோக்கமாக இருக்கிறது.
அதேவேளை, மலையகத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை பலப்படுத்துவது பற்றியும் கலந்துரையாடப்பட்டுவருகிறது. சு.கவின் அமைப்பாளராக இருந்தவர்கள், நாடாளுமன்றத் தேர்தலின்போது ஐக்கிய தேசியக் கட்சி பக்கத் தாவினர் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.