புது வருடத்தை முன்னிட்டு இன்று முதல் விற்பனை நிலையங்களில் சோதனை நடவடிக்கையை முன்னேடுக்கவுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
சில விற்பனை நிலைய உரிமையாளர்கள், பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்வதாகவும், காலவதியான பொருட்களை விற்பனை செய்வதாகவும் நுகர்வோர் பாதுகாப்பு சபைக்கு முறைபாடு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இவற்றை கண்டுபிடிக்க இந்த விஷேட சோதனை நடவடிக்கை முன்னேடுக்கப்படவுள்ளது.