வடமாகாண கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் முற்றாக தடை செய்யப்பட வேண்டும் என்று முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அண்மையில் இந்திய அரசாங்கத்தினால் முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களுக்கு மீன்பிடிப் படகுகளும், கடற்றொழில் சாதனங்களும் வழங்கப்பட்டிருந்தன.
இந்த விடயத்தை வரவேற்கின்ற போதும், தமிழக மீனவர்களின் வருகையை ஏற்றுக் கொள்ள முடியாது என்று முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் சம்மேளனத்தின் தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியதாஸ் தெரிவித்துள்ளார்.
இந்திய அரசாங்கத்தின் உதவியின் ஊடாக, தங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.
ஆனாலும் தமிழக மீனவர்கள் வடமாகாண கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசிப்பதன் ஊடாக தங்களின் வளங்கள் முழுமையாக பாதிக்கப்படுகின்றன.
எனவே தமிழக மீனவர்களின் அத்துமீறிய செயற்பாடுகளை தடுக்க, இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.