இலங்கைத் தீவில் அடுத்து வரும் இரண்டு வாரங்களுக்கு கடுமையான உஷ்ணமான காலநிலை நிலவும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று முதல் 14ம் திகதி வரையில் இலங்கைத் தீவில் சூரியன் உச்சம் கொடுக்கும் என திணைக்களம் அறிவித்துள்ளது.
அதற்கமைய இன்று முதல் தொடர்ந்து அகுரஸ்ஸ, ரத்ன ஆகிய பிரதேசங்களிலும், 5ஆம் திகதி வெலிபென்ன, வெத்தாகல, அங்குனுகொலபெலஸ்ஸ ஆகிய பிரதேசங்களுக்கும் சூரியன் உச்சம் கொடுக்கும்.
ஏப்ரல் மாதம் 6ம் திகதி பொரலெஸ்கமுவ, மஸ்கெலிய, அருகம்பே ஆகிய பிரதேசங்களுக்கு சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது. அதற்கமைய கொழும்புக்கு அருகில் எதிர்வரும் 6 ஆம் திகதியே சூரியன் உச்சம் கொடுக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, எதிர்வரும் 7ஆம் திகதி நீர் கொழும்பு, வரகாபொல, அக்கரைப்பற்று, கலிகமுவ ஆகிய பிரதேசங்களுக்கு சூரியன் உச்சம் கொடுக்கும்.
ஏப்ரல் மாதம் 08ஆம் திகதி பிங்கிரிய, கொகரெல்ல, ஹென்னானிகல ஆகிய பிரதேசங்களுக்கு சூரியன் உச்சம் கொடுக்கும். ஏப்ரல் 9ஆம் திகதி அனுராதபுரம், அக்போபுர ஆகிய பிரதேசங்களிலும், 11ஆம் திகதி ரலபானவ, நிலாவெளி ஆகிய பிரதேசங்களுக்கும் சூரியன் உச்சம் கொடுக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதற்கமைய இந்த பிரதேசங்களில் சூரியன் உச்சம் கொடுக்கும் நாட்களில் கடுமையான வெப்பமும் சூரிய ஒளியும் காணப்படும் என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களால் இலங்கைத் தீவில் தொடரும் கடும் வெப்ப நிலையில் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.