கஞ்சா கலந்த பாபுளை வைத்திருந்த இந்தியர் ஒருவர் மட்டக்களப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது நேற்றைய தினம் இந்த நபர் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த இந்தியப் பிரஜையிடமிருந்து 15கிராம் 300 மில்லிகிராம் பாபுள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் சந்தேகநபர் நேற்றைய தினமே மட்டகளப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதைத் தொடர்ந்து குறித்த நபரை பிணையில் விடுவித்ததோடு, எதிர்வரும் 18ம் திகதி மீண்டும் சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
திருகோணமலை – கந்தளாய் பிரதேசத்தில் 250 மில்லிகிராம் கஞ்சா வைத்திருந்த நபர் ஒருவரை நேற்றைய தினம் கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட நபர் கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர். குறித்த சந்தேகநபர் வயலுக்கு கஞ்சாவை கொண்டு சென்ற போதே கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவரை இன்று பிணையில் விடுதலை செய்துள்ளதோடு, நாளை திங்கட்கிழமை கந்தளாய் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.