குடிபோதையில் வந்து தனது இரண்டு குழந்தைகளை கொடூரமாக தாக்கிய தந்தை, இன்று பொகவந்தலாவை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் குடிபோதையில் வீட்டுக்கு வந்த போது வீட்டில் இருந்த தனது இரண்டு குழந்தைகளை தாக்கியதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தமக்கு மட்டுமல்ல தமது தாயையும் எப்போதும் தந்தை தாக்குவார் என குறித்த குழந்தைகள் காவற்துறையில் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளான குழந்தைகள் பொகவந்தலாவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இவர்கள் 13 மற்றும் 15 வயதானவர்கள் ஆகும்.