முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களுக்கு இந்திய அரசாங்கம் மீன்பிடி படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை வழங்கியமைக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுனர் எஸ். ராம்தாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
விசேட ஒப்பந்தம் ஒன்றின் மூலம் 4.5 கோடி ரூபாய் பெறுமதியான படகுகளும், உபகரணங்களும் முல்லைத்தீவு மாவட்டத்தின் மீனவர்களுக்கு இந்திய அரசாங்கம் வழங்கியது.
இது தமிழக மீனவர்களை காட்டிக் கொடுக்கும் செயல்.தமிழக மீனவர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை இலங்கை அரசாங்கம் கொண்டுள்ளது.
இந்த நிலையில், இந்திய அரசாங்கம் இந்த உதவிகளை வழங்கி இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அவர் கூறியுள்ளார்.