இலங்கை மற்றும் இந்திய மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினைகளை தீர்ப்பது குறித்து ஆராய்வதற்காக, மீன்பிடித்துறை அமைச்சர் மகிந்த அமரவீர எதிர்வரும் மே மாதம் இந்தியா செல்லவுள்ளார். ஊடகத் தகல்கள் இதனைத் தெரிவிக்கின்றன.
அவர் அங்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ், இந்த விடயம் குறித்த பேச்சுவார்த்தைக்காக மீன்பிடித்துறை அமைச்சர் மகிந்த அமரவீரவை இந்தியாவுக்கு அழைத்திருந்தார். இந்த விஜயம் கடந்த மாதமே இடம்பெறவிருந்தது.
எனினும் குறிப்பிடப்படாத காரணங்களுக்காக விஜயம் பிற்போடப்பட்டிருந்த நிலையில், அடுத்தமாதம் அவர் இந்தியா செல்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.