சம்மாந்துறை நிந்தவூர் பிரதேசத்தில் 5 வயது சிறுவன் மீது சூடு வைத்து காயப்படுத்திய பாட்டி தொடர்பாக எமது செய்தி சேவைக்கு தகவல் கிடைத்துள்ளது.
கடந்த மார்ச் 31 ஆம் திகதி பாட்டியிடம் பிஸ்கட் கேட்ட போது அவர் தீயினால் சூடாக்கப்பட்ட கத்தியை குறித்த சிறுவன் மீது வைத்து காயப்படுத்தியுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
சிறுவன் தற்போது நிந்தவூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் குறித்த பாட்டி நேற்று காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சிறுவனின் பெற்றோர் வேறு திருமணம் முடித்து விலகி வாழ்ந்து வந்து வருவதாக காவற்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.