காலி மஹாமோதர பிரதேசத்தில் சிற்றூர்தி ஒன்று தீயினால் சேதமடைந்துள்ளது.
இன்று அதிகாலை கொழும்பில் இருந்து காலி நோக்கி பயணித்த இந்த சிற்றூர்தி பாதையை விட்டு விலகி மரமொன்றில் மோதிய பின்னர் தீ பிடித்துள்ளது என தெரியவந்துள்ளது.
குறித்த விபத்தினால் சிற்றூர்தியின் சாரதி கடும் காயங்களுடன் காராபிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.