ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் பத்மநாபா அணி தமது பெயரை மாற்றவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் செயலாளர் சிறிதரன் இதனைத் தெரிவித்துள்ளார்.
அதன் பெயரில் உள்ள ஈழம் மற்றும் விடுதலை ஆகிய சொற்களை நீக்கும் வகையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன்படி அந்த கட்சி எதிர்காலத்தில் தமிழர் சோசலிச ஜனநாயக கட்சி என்ற பெயர் ஈ.பி.ஆர்.எல்.எப் செயற்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.