பேலியகொடை பியகமை வீதியின் அருகாமையில் உள்ள பாலத்தில் கண்டெய்னர் ரக பாரவூர்தி மோதுண்டதின் காரணமாக சிதைவடைந்த பாலத்தின் வேலைப்பாடுகள் ஆரம்பித்துள்ளது.
இதன் காரணமாக பேலியகொடை பியகமை வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பயணிகளை காவற்துறை வேண்டியுள்ளது.
பேலியாகொடயில் இருந்து பியகமை நோக்கி பயணிப்பவர்கள், பேலியாகொடை கண்டி வீதியினூடாக பியகமையிற்கு செல்ல முடியும் என காவற்துறை தெரிவித்துள்ளது.