பொதுமக்களுக்கு மேலதிக சேவையினை வழங்குவதற்காக நாட்டின் சுமார் 15 ஆயிரம் கிராம சேவகர்களை சமாதான நீதவான்களாக நியமிப்பதற்கு அரசாங்கம் எடுத்திருந்த தீர்மானத்திற்கு அமைய குறித்த நியமனங்கள் இம் மாதம் 7ம் திகதி வழங்கபடவுள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வௌியிட்டு குறித்த அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் , நிரந்தரப் பதவியில் உள்ள அனைத்துக் கிராம சேவகர்களும் குறித்த பிரதேச செயலகப் பிரிவின் கீழ் சமாதான நீதவான்களாக நியமனம் பெற உள்ளனர் .