தீக்காயத்துடன் புத்தள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்த பெண் தொடர்பில் காவற்துறை விசேட விசாரணையை ஆரம்பித்துள்ளது.
அனுராதபுரம் – கடயாகுளம் பிரதேசத்தினை சேர்ந்த குறித்த பெண், கடந்த 29 ஆம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை தீகாயம் காரணமாகவே என அறியவந்துள்ளது.
புத்தளம் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் நேற்று இந்த பெண் உயிரிழந்ததுடன், பிரேத பரிசோதனையில் தீகாயத்தினால் குறித்த பெண்ணின் உடல் படு காயமடைந்துள்ளமை அறியவந்துள்ளது.