10 அகவையான சிறுவன் ஒருவர் உயிரிழக்க காரணமாக அமைந்த சட்டவிரோத மின்சார வேலியை அமைத்த ஒருவர் நாவலபிட்டிய பேலி வீதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
காவல்துறை ஊடகப்பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
நேற்று மாலை இந்த பகுதியில் உள்ள சிறுவன் காணாமல் போயிருப்பதாக காவல் துறையில் முறைப்பாடு செய்யப்பட்டது..
இதனை அடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது குறித்த சிறுவனின் வீடருகில் உள்ள கோழி வளர்ப்பு பண்ணையில் இருந்து அவர் உடலமாக மீட்கப்பட்டார்.
பண்ணையில் பொருத்தப்பட்டிருந்த சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கியே அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பத்து அகவை குலராஜா பிரத்திக் ராஜ் என காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.