கேகாலை -வரகாபொல ஆயுர்வேத மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளர் ஒருவர் நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மருத்துவமனையின் ஊழியர் ஒருவர் இன்று அதிகாலை மருத்துவமனையின் குறித்த வார்டை திறந்த போது குறித்த நோயாளர் இவ்வாறு தூக்கிட்டு இருப்பதை கண்டுள்ள நிலையில் , வரகாபொல காவற்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.
40 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.