திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய் -சேருநுவர பிரதான வீதியூடாக அதிவேகத்துடன் சென்ற மோட்டார் சைக்கிளொன்று மாட்டுடன் வியாழக்கிழமை(31/03/2016) இரவு மோதியதில் மோட்டார் சைக்கிள் தீப்பற்றியதுடன், அதன் சாரதி உயிரிழந்ததாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.
கந்தளாயைச் சேர்ந்த வீ.பீ.நெத்சிறி நளிந்த (வயது 38) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
புதிய மோட்டார் சைக்கிளே விபத்துக்குள்ளானதாக விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.சடலம் தற்போது கந்தளாய் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும்,
இந்த விபத்துத் தொடர்பில் சேருநுவர பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.